முன்னாள் லயன்ஸ் சங்க ஆளுநர்களுக்கு பாராட்டு விழா

முன்னாள் லயன்ஸ் சங்க ஆளுநர்களுக்கு பாராட்டு விழா
X

லயன்ஸ் சங்க  முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் லயன்ஸ் சங்கம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.

போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் லயன்ஸ் மாவட்ட ஆளுநர்கள் கவுரவிக்கப்பட்டனர்

போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் மாவட்ட ஆளுநர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத்தலைவர் திருமுகம் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் முன்னாள் லயன்ஸ் மாவட்ட ஆளுநர்கள் கவுரவிக்கப்பட்டனர். லயன்ஸ் சங்க மாவட்ட ஜி ஏ டி ஒருங்கிணைப்பாளர் ஆர் அன்பரசு, முன்னாள் மாவட்ட ஆளுநர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் பேராசிரியர் ரத்னா நடராஜன், டாக்டர் நரசிம்மன், அரவிந்த் குமார் , வி.எஸ் .தளபதி, முருகப்பா ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் டாக்டர் சுகந்தி அன்பரசு, சுரேஷ், மற்றும் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!