உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
X

பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள்

உணவுப் பொருள் வழங்கல் துறை தீர்வு நாள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றது

உணவுப் பொருள் வழங்கல் துறை தீர்வு நாள் மற்றும் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை சார்பாக, திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி உணவு பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் திருவண்ணாமலை மாவட்டத்திலேயே முதன் முறையாக காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை சென்னை பரிசான் நிறுவன நிறுவனர் பசுபதி வழங்கினார்.

வாழ்க்கையில், நாம் எவ்வாறு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் , அதற்கான விழிப்புணர்வை எவ்வாறு மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் இப்பயிற்சியில் செய்முறை விளக்கங்களுடன் ஆசிரியர்களுக்கு வலியுறுத்தி பேசினார்.

இப்பயிற்சி பட்டறையில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் 36 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் நல மற்றும் ஆரோக்கிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சி பட்டறையில் திருவண்ணாமலை வட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சிவபாலன், பள்ளி தாளாளர் ரமணி கோட்டீஸ்வரன், பள்ளி முதல்வர் ராஜேஷ் குமார் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

போளூர்

போளூர் அருகே உணவுப்பொருள் வழங்கல் குறை தீர்வு நாள் முகாம் நடந்தது.

சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவுபடி, போளூர் தாலூாகாவில் உள்ள திருமலை கிராமத்தில் சிறப்பு குறைத்தீர்வு நாள் முகாம் நடைபெற்றது.

தாலூகா விநியோக அலுவலர் தேவி தலைமை தாங்கினார். வட்ட பொறியாளர் என்.செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சத்தீஜா வரவேற்றார். முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் போன்ற கோரிக்கை 56 மனுக்களை கிராம மக்கள் வழங்கினார்கள்.

இதுகுறித்து தாலூகா வினியோக அலுவலர் தேவி கூறுகையில், அரசின் உத்தரவுப்படி மக்களை தேடி அரசு அதிகாரிகள் நேரில் வந்து குறைகள் கேட்டறிந்து, அவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். போளூர் தாலூகாவில் 138 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளில் பிரதி மாதம் 2-வது சனிக்கிழமை தோறும் குறை தீர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதில் உடனுக்குடன் குறைகள் சரி செய்யப்படுகிறது. இதுவரை 8 இடங்களில் இது போன்ற முகாம் நடத்தப்பட்டுள்ளது, என்றார்.

நிகழ்ச்சியில் வட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு பாதுகாப்பிற்கான விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Next Story
Spam Call வந்துட்டே இருக்கா.....?  அதுக்குதா ஒரு புதிய தொழில்நுட்பம் ஏர்டெல் நெட்வொர்க் கொண்டுவந்துருக்கா...?