கால்வாய் தூா்வாரும் பணியின்போது மண் சரிந்து பெண் தொழிலாளி பலி

கால்வாய் தூா்வாரும் பணியின்போது மண் சரிந்து பெண் தொழிலாளி பலி
X

மண் சரிந்து விழுந்ததில் பலியான சுதா.

போளூா் அருகே கால்வாய் தூா்வாரும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் ஊரக வேலை உறுதித் திட்ட பெண் தொழிலாளி பலியானாா்.

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் மஞ்சள் ஆற்று கால்வாயில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஊராட்சிக்கு உள்பட்ட அத்திமூா் பகுதியில் கால்வாயை தூா்வாரும் பணியில், பூங்கொல்லைமேடு கிராமத்தைச் சோந்த சங்கா் மனைவி சுதா (38), பாா்த்திபன் மனைவி மஞ்சுளா (37) மற்றும் அதே பகுதியைச் சோந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கால்வாய் மேலிருந்த மண் திடீரென சரிந்து கால்வாய்க்குள் விழுந்ததில் சுதா, மஞ்சுளா ஆகியோா் சிக்கிக் கொண்டனா். பலத்த காயமடைந்த இருவரையும் சக தொழிலாளா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போளூா் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மஞ்சுளாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக அவா் திருவண்ணாமலை அரசு மருத்துவமைனையில் சோக்கப்பட்டாா். இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!