வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம்
X

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம் 

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் ஒன்றியத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது

கண்ணமங்கலம் ஒன்றியத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பூச்சி மற்றும் நோய் சார்ந்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த விவசாயிகள் ஏரி மற்றும் கால்வாய்களை தூர்வார வேண்டும். அதேபோல் ஏரியில் மீன் வளர்க்க வருடம்தோறும் ஏலம் விடப்படுகிறது இதனால் ஏரியில் நீர் நிரம்பாதவாறு ஏலம் எடுப்பவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளின் விவசாயமும் கிராம மக்களின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படுகிறது. எனவே ஏலம் விடுவதை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் பெயரளவில் நடத்தப்படாமல் முறையான பயிற்சி அளித்து நடத்தப்பட வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். போதிய விளம்பரம் இல்லாததால் குறைந்த அளவில் மட்டுமே விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!