கோடை மழை பெய்ததால் நெல்லை விதைப்பு செய்ய தொடங்கிய விவசாயிகள்

கோடை மழை பெய்ததால் நெல்லை விதைப்பு செய்ய தொடங்கிய விவசாயிகள்
X

விதை நெல் விவசாயம் செய்யும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விதை நெல்லை விதைப்பு செய்ய விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு கலசப்பாக்கம் பகுதிகளில் போதுமான அளவு கோடை மழை பெய்ததால் கிணறு மற்றும் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து விவசாயம் செய்ய விதை நெல்லை விதைப்பு செய்ய தொடங்கியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூர், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள பெரணம்பாக்கம், கரைப்பூண்டி, முடையூர் நரசிங்கபுரம், ஆத்துரை, ஜமுனா மரத்தூர், ஜவ்வாது மலை, மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, உள்ளிட்ட கிராமங்களில் கடந்த வாரம் பலத்த கோடை மழை பெய்தது.

இந்தக் கோடை மழைக்கு இப்பகுதியில் உள்ள திறந்த வெளி கிணறு, ஆழ்துளை கிணறு, நீர் நிலைகளில் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது.

இதனால் இப்பகுதியில் உழவு நிலங்கள் ஈரப்பதம் ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து நிலத்தை டிராக்டர் கொண்டு உழுது விவசாயம் செய்ய பல்வேறு வகை சார்ந்த விதை நெல்மணிகளை விதைப்பு செய்ய தொடங்கியுள்ளனர்.

இதுகுறிப்பு இப்பகுதி விவசாயிகள் கூறும் போது பருவ மழை ஜூன் ஜூலை மாதத்தில் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது, எனவே நெல் சாகுபடி செய்ய உள்ளோம், அதற்காக தான் இப்போதே நெல்மணிகளை விதைக்க தொடங்கியுள்ளோம் என தெரிவித்தனர்.

ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நான்காம் ஆண்டு மாணவ, மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட கண்காட்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மாணிக்கம் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கவுரி, கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் தியாகராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் பயிற்சி அனுபவங்களைப் பற்றி கேட்டறிந்தனா். வேளாண்மை தொடா்பாக மாதிரி தொழில்நுட்பங்கள், பாரம்பரிய விதைகள், மாணவா்களின் பதிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி பேராசிரியர்கள் , விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று கண்காட்சியை பார்வையிட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!