யூரியா கடும் தட்டுப்பாடு: திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் வேதனை

யூரியா கடும் தட்டுப்பாடு: திருவண்ணாமலை மாவட்ட  விவசாயிகள் வேதனை
X

பைல் படம்

யூரியா தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் காரணமாக விவசாய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பகுதியில் யூரியா தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கண்ணமங்கலம், படவேடு, சந்தவாசல் , ஆகிய ஊர்களில் விவசாய கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் மூலம் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஏற்ப விவசாயத்துக்கு தேவையான விதைகள், இடுபொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் கடன் உதவி பொதுமக்கள் பெற்று வருகிறார்கள்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே திருவண்ணாமலை மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல பாகங்களில் மழை பெய்து வருகிறது . விவசாயிகள் ஆர்வமுடன் நெல் பயிரிடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.நெற்பயிருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உரமிடுதல் வேண்டும் என்பதற்காக விவசாயிகள் பயிர் வளர்ச்சிக் கான யூரியா உரத்தை வாங்குவதற்கு கூட்டுறவு விவசாய சங்கத்திற்கு செல்கின்றனர்.அங்கு யூரியா இருப்பு இல்லாததால் கவலையுடன் வீடு திரும்புகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நோக்கி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.தனியார் உரக் கடைகளில் யூரியாவின் விலையை அதிகமாக வாங்குவதாக குற்றம்சாட்டினர்.ஒரு மூட்டை விலை வரிகள் உட்பட 266 ரூபாய் என யூரியா முட்டையின் மீது அச்சிடப்பட்டு இருந்தாலும், அந்த மூட்டையை கடை உரிமையாளர்களும் ஆசைக்கேற்ப அதிக லாப நோக்கத்தோடு விற்பதாக குற்றம் சாட்டினர். கடைக்காரர் கேட்கும் தொகையை கொடுக்காவிட்டால் யூரியா இல்லை என மறுக்கப்படுகிறது.

செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை ஏற்றத்தின் மூலம் தனியார் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதை அரசுத் துறை அதிரடியாக ஆய்வு செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் கவனஈர்ப்பு போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது என்றும் , உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது

என்று விவசாயத்தின் மூலம் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதற்கு முன்னோர்கள் எச்சரிக்கை செய்து இருந்தும், தற்காலத்திலும் உழவுத் தொழில் உயிர்களுக்கு உணவளிக்கும் உன்னத தொழில் எனக் கருதி விவசாயிகள் அத்தொழிலை செய்வதில் தொய்வை ஏற்படுத்தக்கூடிய இது போன்ற சிரமங்களை தீர்க்க: வேளாண்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!