அரிமா சங்கம் சார்பில் காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்

அரிமா சங்கம் சார்பில் காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்
X

அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவலர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்திரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், போளூர் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமை டிஎஸ்பி அறிவழகன் தொடங்கி வைத்தார்.

போளூர் காவல் நிலையம் ,மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் காவலர்களுக்கு கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடுகள், கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போளூர் அரிமா சங்கத் தலைவர் திருமுருகன், மாவட்டத்தலைவர் அன்பரசு, முன்னாள் தலைவர்கள் சுரேஷ், மகேந்திரன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products