/* */

துரிஞ்சிகுப்பம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போளூர் அருகே துரிஞ்சிகுப்பம் ஊராட்சி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்

HIGHLIGHTS

துரிஞ்சிகுப்பம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

துரிஞ்சிகுப்பம் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில் 74 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் சிலர் இந்த ஏரியில் 32 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமித்து நெல், நிலக்கடலை ,உளுந்து என சாகுபடி செய்து வந்துள்ளனர். இதனால் ஏரியில் மழைநீரை சேகரிக்க முடியவில்லை.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று தொடங்கியது. ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஏடிஎஸ்பி வெள்ளை துரை ஆகியோர் முன்னிலையில் ஏரியை அளவீடு செய்து 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

வட்டாட்சியர் சன்முகம் ,சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சிவலிங்கம் மற்றும் வருவாய்துறையினர் உடனிருந்தனர். ஆரணி டிஎஸ்பி தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 1 Dec 2021 7:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க