வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம்
X

கலெக்டர் முருகேஷ்

Training Camp -சேத்துப்பட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Training Camp -திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் புதன்கிழமை இன்று (அக்.26) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

போளூா் சாலையில் அமைந்துள்ள டோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பொருட்டு, தொழில்திறன் பயிற்சி முகாம் இன்று காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில் எட்டாம் வகுப்பு முதல் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, பட்டயம், பொறியியல், செவிலியா், ஐடிஐ, தையல் தொழில் பயின்ற 18 வயது முதல் 35 வயதுடைய இருபாலா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சை பயறு கொள்முதல்

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் விடுத்துள்ள மற்றொரு செய்தி குறிப்பில், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பச்சை பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு வருகிற டிசம்பர் மாதம் 29-ம் தேதி வரையிலான காரிப் பருவ காலத்தில் பச்சைப்பயறு சாகுபடி செய்யப்பட உள்ளது. இதில் பச்சை பயறு ஒரு கிலோ ரூ.77.55-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 354 கிலோ மட்டுமே ஒரு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 420 டன் கொள்முதல் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பச்சை பயறு விற்பனைக்கு எடுத்து வரும் பொழுது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்கம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

வெள்ளாடு வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி

திருவண்ணாமலையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2 நாட்கள் நடக்கிறது

கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையத் தலைவா் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வியாழன், வெள்ளி (அக்.27, 28) இரு நாள்கள் வெள்ளாடு வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வியாழன், வெள்ளி (அக்.27, 28) இரு நாள்கள் வெள்ளாடு வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் அவ்வப்போது விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வியாழன், வெள்ளி (அக்டோபா் 27, 28) ஆகிய இரு நாள்கள் வெள்ளாடு வளா்ப்பு குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. முதலில் முன்பதிவு செய்யும் 20 விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள் 04175-298258, 9551419375 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவா் பி.பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா