/* */

நகைக் கடைகளில் தேர்தல் பறக்கும்படியின திடீர் சோதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகைக் கடைகளில் தேர்தல் பறக்கும்படியின திடீர் சோதனை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

நகைக் கடைகளில் தேர்தல் பறக்கும்படியின திடீர் சோதனை
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகைக் கடைகளில் தேர்தல் பறக்கும்படியின திடீர் சோதனை மேற்கொண்டனர்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதயொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரில் ஏராளமான நகை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் செஞ்சி சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் வந்தவாசியில் உள்ள பிரபலமான நகைக்கடை என இரண்டு நகை கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வருமான வரித்துறை ஆணையாளர் தலைமையிலான குழுவினர் மற்றும் 20 பேர் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மொத்தமாக ஏதாவது பொருட்கள் ஆடர் செய்யப்பட்டுள்ளதா, நகை கடையில் வருமான வரி சரியாக கட்டப்பட்டுள்ளதா, ஏதாவது கணக்குகள் மறைக்கப்பட்டுள்ளதா ,வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா ,என சோதனை செய்தனர். நேற்று மாலை 7 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது.

இந்த சோதனை, முக்கிய நகை கடைகளில் வருமானவரித்தரை சோதனை நடந்ததால் மற்ற நகை கடைக்காரர்கள் தங்களின் கடைகளை அவசர அவசரமாக மூடிவிட்டு சென்றுவிட்டனர்.

போளூர்

போளூரில் உள்ள முக்கிய 3 நகைக்கடைகள் மற்றும் வீடுகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், சிந்தாதிரிபேட்டை தெருவில் உள்ள பிரபலமான 3 நகைக்கடைகளில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுப்பிரமணி தலைமையிலான குழுவினர் மற்றும் வருமான வரித்துறையினர் 20 பேர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அதேபோல், நகைக்கடை உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடந்தது. அப்போது, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஏதாவது மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளதா, நகைக்கடைகளில் வருமான வரி சரியாக கட்டப்பட்டு உள்ளதா, ஏதாவது மறைக்கப்பட்டு உள்ளதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கப்பட்டு உள்ளதா என சோதனை செய்தனர். நேற்று மாலை தொடங்கிய சோதனை இரவும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. முக்கிய நகைக்கடைகள் மற்றும் அவர்களது வீடுகளில் நடந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 7 April 2024 1:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!