கல்வி நிதிசார் விழிப்புணர்வு கூட்டம்!
சேத்துப்பட்டு பகுதியில் நடைபெற்ற கல்வி நிதிசார் விழிப்புணர்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேளம் தாங்கள் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி சேத்துப்பட்டு கிளை சார்பாக கல்வி நிதி சார் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சேத்துப்பட்டு கிளை மேலாளர் உமாதேவி தலைமை தாங்கினார் . மேலந்தாங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஷகிலா முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் வங்கி மேலாளர் உமாதேவி பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி கிராமப்புற மக்களுக்கு சிறு வணிக கடன் , மகளிர் தொழில் முனைவோர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், ஆதரவற்ற விதவை மற்றும் கைம் பெண்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு வாழ்வாதாரத்திற்கு கடன், மகளிர் சுய உதவி குழு கடன், குறைந்த வட்டிக்கு நகை கடன், பொதுமக்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு மற்ற வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி என வழங்கி மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பாக வேலை செய்து வருகிறது.
மேலும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கிராமப்புற வளர்ச்சிக்கு வங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் கேட்டுக்கொண்டார்.
மேலும் கிராமத்தில் புதியதாக சிறுசேமிப்பு கணக்குகள் தொடங்கி மூன்று சிறு வணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் வழங்க விண்ணப்பங்களை வழங்கினார்.
கூட்டத்தில் கிராம பொதுமக்கள் விவசாயிகள் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
தகவலுக்காக:
கல்வி நிதிசார் விழிப்புணர்வு என்பது, கல்விச் செலவுகள், நிதியுதவி வாய்ப்புகள் மற்றும் நிதித் திட்டமிடல் ஆகியவற்றைப் பற்றிய அறிவைக் கொண்டிருப்பதாகும். இது மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, கல்வி இலக்குகளை அடைய உதவும் ஒரு முக்கியமான திறன் ஆகும்.
கல்வி நிதிசார் விழிப்புணர்வு கொண்ட மாணவர்கள் பின்வரும் நன்மைகளைப் பெறலாம்:
அவர்கள் தங்கள் கல்விச் செலவுகளைப் பற்றி சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
அவர்கள் நிதியுதவி வாய்ப்புகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
அவர்கள் நிதித் திட்டமிடலில் திறமையாக இருப்பார்கள், இது அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் திட்டங்களுக்குப் பின்னர் தங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும்.
கல்வி நிதிசார் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான சில வழிகள் பின்வருமாறு:
கல்வி நிதிசார் விஷயங்களைப் பற்றிய கற்றல் வாய்ப்புகளைத் தேடுங்கள். இதில் கல்வி நிதிசார் வழிகாட்டுதல், பயிற்சிகள் மற்றும் பட்டறைகள் ஆகியவை அடங்கும்.
உங்கள் கல்வி நிறுவனத்தின் கல்வி நிதிசார் சேவைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்த சேவைகள் நிதி உதவி விண்ணப்பங்களை நிரப்புவதில் உதவுதல், நிதித் திட்டமிடல் ஆலோசனை வழங்குதல் மற்றும் பிற நிதிசார் உதவிகளை வழங்குதல் ஆகியவற்றில் உதவும்.
உங்கள் குடும்பத்தினருடன் கல்வி நிதிசார் விஷயங்களைப் பற்றி பேசுங்கள். அவர்கள் உங்கள் கல்வி இலக்குகளை அடைய உதவ முடியும் மற்றும் உங்கள் நிதி திட்டத்தில் உங்களுக்கு ஆதரவளிக்க முடியும்.
கல்வி நிதிசார் விழிப்புணர்வு என்பது ஒரு வாழ்நாள் திறன் ஆகும். கல்வி வாழ்க்கையில் தொடங்குவதோடு, அதை வாழ்நாள் முழுவதும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu