திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
கல்வி வளர்ச்சி நாள் விழாவில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்த ஆசிரியர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது
ஜமீன் அகரம் அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒ ன் றி ய நடுநிலைப்பள்ளியில், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதின் அவசியம் குறித்து பேசினார். ஆசிரியர்கள் மணிமேகலை, கௌரி, சுடர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அருண்குமார் வரவேற்றார். ஆசிரியை மார்கிரேட்மேரி காமராஜரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் காமராஜரின் சாதைனைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றினை, மாணவர்கள்கவிதையாகவும், பாடலாகவும், உரையாகவும் நிகழ்த்தினர். விழாவையொட்டி நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதை போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் ஹைடெக் லேப் உதவியாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காமராஜர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளாக நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா காமராஜர் வேடமனிந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சீ. ம. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதில் காமராஜர் வேடமிட்டு மாணவர்கள் உரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள், ஆசிரியர் பயிற்றுநர் தமிழ் மேசன், திருமால்பாடி ஊராட்சி உறுப்பினர் காஞ்சனா, ஆசிரியை அகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழாவில் மாணவர்களுக்கு நல்வழி நூல் வெளியீடு
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா செங்கம் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் “மாணவர்களுக்கு நல்வழி நூல்” என்ற புத்தகத்தினை திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் கோபிநாத் வெளியிட அரட்டவாடி அரசுபள்ளி தலைமையாசிரியர் சதாசிவம் பெற்றுக்கொண்டார். நூல் அறிமுக உரையை கவிஞர் தமிழ்மதி நிகழ்த்தினார். விழாவில் மேனாள் டிஆர்ஓ சண்முகம், கல்வியாளர்கள் மாணிக்கம், அப்துல்காதர், பாரத்பள்ளி முதல்வர் கவியரசன், ஆசிரியர்கள் வெங்கடேசன், லோகானந்தம், தமிழன்பிரபு மற்றும் மாணவர்களோடு பலர்கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நூலாசிரியர் முனைவர் மணிமாறன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் நூலகர் நேத்தாஜி வரவேற்க நூலகர் தமிழ்செல்வி நன்றியுரை கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu