தொடர் கனமழை எதிரொலி: ஜமுனாமரத்தூர்-போளூர் சாலையில் மண் சரிவு

தொடர் கனமழை எதிரொலி: ஜமுனாமரத்தூர்-போளூர் சாலையில் மண் சரிவு
X

மண் சரிவு ஏற்பட்டுள்ள ஜமுனாமரத்தூர்- போளூர் சாலை.

ஜமுனாமரத்தூர் - போளூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜமுனாமரத்தூர் டூ போளூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

ஜவ்வாது மலை மலைப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக போளூர் வட்டம், அத்திமூர் கிராமத்தில் உள்ள மஞ்சள் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை போளூர் கண்காணிப்பு அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் போளூர் வட்டாட்சியர் பார்வையிட்டனர்.

தற்போது அத்திமூர் கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் நீரால் சூழப்பட்டுள்ளது. கணக்குகள் மற்றும் ஆவணங்கள் பாதுகாப்பாக பத்திரப் படுத்தப்பட்டுள்ளது என போளூர் வட்டாட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!