/* */

நடத்தையில் சந்தேகம்.. கழுத்தை அறுத்து பெண் கொலை; கணவன் கைது

நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார்.

HIGHLIGHTS

நடத்தையில் சந்தேகம்.. கழுத்தை அறுத்து பெண் கொலை; கணவன் கைது
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ் (வயது 36). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு சவாரி செல்வது வழக்கம். இவரது மனைவி பச்சையம்மாள் (30). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது. 6-ம் வகுப்பு படிக்கும் திவ்யா (11) என்ற மகளும், நான்காம் வகுப்பு படிக்கும் கதிர்வேலு (9) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் பச்சையம்மாள் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கணவனிடம் சண்டை போட்டுவிட்டு பச்சையம்மாள் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.

காலை 10 மணி அளவில் கொரால்பாக்கம் கிராமத்திற்கு சுரேஷ் சென்று கள்ளக்காதல் குறித்து பச்சையம்மாளிடம் கேட்டுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது பச்சையம்மாள் கள்ளக்காதலை கைவிட மறுத்து கணவன் சுரேஷிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி பச்சையம்மாள் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து சுரேஷ் போளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் சரணடைந்தார்.

உடனடியாக டிஎஸ்பி குமார் மேற்பார்வையில், போலீசார் சென்று பச்சையம்மாள் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Sep 2022 11:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!