போளூர் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

போளூர் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்
X

ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

போளூர் ரெட்கிராஸ் சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

போளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

போளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் முகக்கவசம், பழங்கள், கையுறைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதேபோல், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முடி திருத்துபவர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், சோப்புக்கட்டிகள், குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் போளூர் வட்டாட்சியர் ஷாப் ஜான், மாவட்ட ரெட்கிராஸ் சங்கத்தலைவர் இந்தராஜன், போளூர் நகர ரெட்கிராஸ் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்