திருவண்ணாமலை மாவட்டத்தில் டிஐஜி ஆய்வு..!
போளூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டி ஐ ஜி
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் டிஎஸ்பி அலுவலகத்தில் வேலூா் சரக டிஐஜி முத்துசாமி போளூா் உள்கோட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட போளூா், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம்,கடலாடி, ஜமுனாமரத்தூா் ஆகிய காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள 2017 முதல் 2023 வரையிலான வழக்குக் கோப்புகளைஆய்வுசெய்தாா்.
இந்த ஆய்வுக்குப் பிறகு, டிஐஜி முத்துசாமி கூறியது:
போளூா் டிஎஸ்பி அலுவலகத்திற்குள்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் ஜமுனாமரத்தூா் காவல்நிலையத்துக்கு நேரடி எஸ்.ஐ.நியமிக்கப்படுவா்.
கலசப்பாக்கம் காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கடத்தல், திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வழக்கு முடிந்த நிலையில், ஏலம் விடப்படும் என்றாா்.
அப்போது, டிஎஸ்பி கோவ்ந்தசாமி, காவல் ஆய்வாளா் பிரபாவதி, சிறப்பு காவல் உதவிஆய்வாளா் சந்திரசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வேலூர் சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி, அவர்கள் ஆய்வு நடத்தி திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன், அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் காவல் நிலையத்தில் வேலூர் சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி, ஆய்வு மேற்கொண்டார். உடன் மேல் செங்கம் காவல் ஆய்வாளர் சாந்தி இருந்தார். இந்த ஆய்வின்போது நிலுவையில் வழக்குகளை உடனடியாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் டி.ஐ.ஜி கூறுகையில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு ஆறு, ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும், நிரம்பியுள்ளதாலும் அதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாரும் இறங்கி குளிக்கவோ அல்லது விளையாடுவோ வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று பேனர் வைத்து பொதுமக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் நீர்நிலைப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu