வயலூர் கிராமத்தில் தர்மராஜா கோவில் கும்பாபிஷேகம்
காலசத்திற்கு புனித நீர் ஊற்றப்படும் காட்சி.
சேத்துப்பட்டு அடுத்த வயலூர் கிராமத்தில் தர்மராஜா கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி மண்டபம் கட்டப்பட்டு இதன் கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 3 யாக குண்டங்கள் அமைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கலசத்தை வைத்து. சந்தோஷ் ஐயர் குழுவினரால் நெய், மற்றும் பல்வேறு பழ வகைகள், மூலிகைகள் மூலம் கோபூஜை, நாடி சந்தனம், அங்கூர் பணம், தம்பதி பூஜை, ஆகிய 3 கால யாக பூஜைகள் செய்து புனிதநீர் கலசத்தை மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது ஊற்றினர்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பூங்குணம், சேத்துப்பட்டு, நந்தியம் பாடி, வேப்பம்பட்டு, நல்லடி சேனை, மடம் ஆகிய சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்த கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu