வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க கோரி தமுமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தமுமுக சார்பில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், தமுமுக சார்பில் வழிப்பாட்டு தலங்களை பாதுகாக்கக் கோரி, மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வழிப்பாட்டு தலங்களை பாதுகாக்க கோரி, மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆரணி சாலையிலிருந்து வந்தவாசி சாலை மேடைக்கு கண்டன குரலிட்டு ஊர்வலமாக வந்தனர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், சேத்துப்பட்டு நகர தமுமுக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஜமால் தலைமை தாங்கினார். மாவட்ட மமக செயலாளர் நசீர் அகமது, மாவட்ட தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் யூனுஸ், மாவட்ட துணைச் செயலாளர் தமீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமுமுக தலைமை கழக பேச்சாளர் மௌலவி ஹூசைன், விசிக முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கர், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாமலை, விசிக மாவட்ட செயலாளர் அசுர.வடிவேல், சிபிஐஎம் தங்கமணி, எல்லப்பன், புரட்சிகர இளைஞர் முன்னணி வேதாச்சலம், வெற்றிச்செல்வன், தமிழ் புலிகள் கட்சி பழனி, ஆனந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக தமுமுக நகர தலைவர் அக்பர் நன்றி கூறினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஜான் முகமது, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் சபியுல்லா, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சிபிஎம் மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், சிபிஐ மாவட்ட செயலாளர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர். தலைமை கழக பேச்சாளர் யூனுஸ், மௌலவி ஹூசைன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu