கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
X

தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கூடிய கிராம மக்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் தனி நபர்கள் ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ளதை ரத்து செய்ய கோரி அப்பகுதி கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் தச்சம்பட்டு கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊருக்கு மத்தியில் பழமை வாய்ந்த விநாயக கோவில் உள்ளது, இந்த கோயிலுக்கு சுமார் 6 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தில் தான் திருவிழாவின்போது பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது விநாயகர் கோயில் பயன்பாட்டில் இருந்து வந்த 4 சென்ட் நிலம் அதே ஊரை சேர்ந்த இரண்டு தனி நபர்கள் மீது யூ டி ஆர் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோயிலுக்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் சரியான முறையில் விசாரணை நடத்தாமல் தனி நபருக்கு பட்டா வழங்கியுள்ளதை ரத்து செய்து மீண்டும் கோயில் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என தாசில்தார் மற்றும் செய்யாறு துணை ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் விசாரணை நடத்திச் சென்றனா். ஆனால், இதுவரை மனு மீது நடவடிக்கை எடுத்து பட்டாவை ரத்து செய்யவில்லையாம்.

இந்த நிலையில், பட்டா பெற்ற நபா்கள் அந்த நிலத்தில் கட்டடம் கட்டுவதற்காக பணியைத் தொடங்கினா்.

இதனைக் கண்ட பொதுமக்கள் கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அப்பகுதி சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோயில் பயன்பாட்டில் இருந்த இடத்தில் தனிநபர் பெயருக்கு பட்டா வழங்கியது ரத்து செய்யக்கோரி மீண்டும் தாசில்தார் விஜய ராணி, காஜாஷரிப் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் கிராம மக்கள் அனைவரும் தாலுகா அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!