கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போளூர் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், போளூர் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் பரணிதரன் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்களில் தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறுவோரை நிரந்தர ஊழியா்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
சங்க வட்டாரத் தலைவா் படவேட்டான், துணைத் தலைவா் அருள், செயலாளர் ஜெயலட்சுமி மற்றும் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டக்கிளை தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலாஜி, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் துணைத் தலைவர் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை அலுவலர் சங்க சண்முகம், மண்டல துணை தாசில்தார்கள் ரவிச்சந்திரன், திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பரசுராமன் அனைவரையும் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எஸ்.எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்கப்பட வேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் ஊர் புற நூலகர்களை நிரந்தரப்படுத்தி காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், 41 மாத பணி நீக்கம் காலத்தை சாலை பணியாளர்களுக்கு மீண்டும் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்கவேண்டும், பள்ளிகுழந்தைகளுக்கான காலை உணவு வழங்கும் பணியை சத்துணவு ஊழியா்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.
இ்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க நிா்வாகிகள், அனைத்து அரசு துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu