ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு புகாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்.
சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் இந்திரவனம், கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில் 52 வீடுகளுக்கு ரூ.3 லட்சத்து65 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் முகநூலில் பதிவில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். இதனையடுத்து கடந்த 23ம் தேதி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.
நேற்று சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திட்டத்திற்கான தொகை எதுவும் எடுக்கப்படவில்லை திட்டப்பணி நடைபெற்று தான் வருகிறது. இதை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் திட்டப் பணி முடிந்து விட்டதாகவும் இதற்கான தொகை எடுத்து விட்டதாகவும் கூறி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார். ஆகவே அவர் மீது புகார் அளித்துள்ளோம் போலீஸ் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
அதேநேரத்தில், தவறான தகவலை வெளியிட்ட இளைஞர் முரளிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் புகார் மனு அளித்தனர்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஜல் ஜீவன் இயக்க மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இளைஞர் முரளி கிருஷ்ணன் மீது ஆட்சியர் முருகேஷ் பகிரங்க குற்றச் சாட்டை தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில்,
இந்திரவனம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் அமைக்காமல் இணைப்பு மட்டும் வைக்கப்பட்டதாக கடந்த 21-ம் தேதி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். அதில், ரூ.3.69 லட்சம் மதிப்பில் 52 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அளவீடு செய்யப்பட்டுள்ளது. பணிக்கான தளவாடப் பொருட்கள், பணித் தளத்தில் கடந்த 19-ம் தேதி வைக்கப்பட்டுள்ளது. 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இப்பணி தொடர்பாக எவ்வித அளவீடுகளும் பதியவில்லை. பட்டியல் தொகை விடுவிக்கப்படவில்லை. கடந்த 22-ம் தேதி பணி தொடங்கப்பட்டு நடைபெறுகிறது.
குடிநீர் குழாய் புதைக்காமல் இணைப்பு வழங்கி இருந்தால், சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்திருப்பார்கள். ஆனால், புகார் மற்றும் ஆட்டேசபனை தெரிவிக்கப்படவில்லை.
முரளிகிருஷ்ணன் என்ற தனி நபர் மட்டுமே, பொய்யான சூழலை ஏற்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ அனைத்தும் உண்மை தன்மை அற்றவை என தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu