/* */

போளூர் அருகே நிலத்தை எழுதி தராததால் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது

போளூர் அருகே கடனை அடைக்க நிலத்தை எழுதி தராததால் மாமியாரை கொலை செய்த மருமகளை, போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போளூர் அருகே நிலத்தை எழுதி தராததால் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட தேவகி.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே புலிவானந்தல் கிராமத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சமுதாய கூடத்தில் தூங்கிக்கொண்டிருந்த காசியம்மாள் (வயது 85) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

காசியம்மாளின் கணவர் மற்றும் செல்வம் உள்பட 2 மகன்கள் ஏற்கனவே இறந்து விட்டனர். மூன்றாவது மகன் சின்ன பையன் பராமரிப்பில் காசியம்மாள் இருந்து வந்தார். காசியம்மாளுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் இளைய மகன் சின்ன பையன் வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போளூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து ஓடியது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். டி.எஸ்.பி. குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.

மூத்த மருமகளான செல்வம் மனைவி தேவகி (வயது 50,) என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காசியம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தேவகிக்கு நரேஷ், சுரேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். சுரேஷ் உள்ளூரில் கூலி வேலை செய்கிறார். நரேஷ் செங்கல் சூளை நடத்தி பெருமளவு நஷ்டம் அடைந்து தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வருகிறார்.

அவருக்கு ரூ.4 லட்சம் கடன் உள்ளது. கடனை அடைக்க வேண்டும் எனவே மாமியார் காசியம்மாளிடம் உள்ள 2 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து கொடுக்க தேவகி வலியுறுத்தி வந்தார். ஆனால் மாமியார் காசியம்மாள் 2 ஏக்கர் நிலத்தை இளைய மகன் சின்ன பையனுக்கு தான் கொடடுப்பேன் என்று கூறிவிட்டார்.

இதனால் மாமியார் காசியம்மாளை கத்தியால் கழுத்தில் குத்திக் கொலை செய்ததாக போலீசாரிடம் தேவகி கூறியுள்ளார். இதனையடுத்து தேவகியை போலீசார் கைது செய்து போளூர் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 7 Sep 2022 10:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு