வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகள் உயிருடன் மீட்பு

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகள் உயிருடன் மீட்பு
X

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

போளூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகள் உயிருடன் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த எலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயி. இவர் காலை தனது நிலத்திற்கு 10 மாடுகளுடன் வந்தார். நிலத்தில் வேலைகளை முடிந்தபின் மாடுகளை ஆற்றோரம் உள்ள மரத்தில் கட்டி இருந்தார்.

கனமழையால் எலத்தூர் செய்யாற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மரத்தில் கட்டியிருந்த 10 மாடுகளை வெள்ளம் அடித்து சென்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் போளூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் விரைந்து சென்று 8 கி.மீ தூரம் வெள்ளத்தில் நீந்தி சென்று கயிறு மூலம் ஒவ்வொரு மாடாக 10 மாடுகளையும் உயிருடன் மீட்டனர். மாடுகளை மீட்ட தீயணைப்பு துறையினரை கிராம மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!