போளூர் தாலுகா பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

போளூர் தாலுகா பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்
X

போளூர் தாலுகா பகுதிகளில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர் 

போளூர் தாலுகா பகுதிகளில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை ஆகியவை இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று திருவண்ணாமலையில் துவக்கி வைத்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பகுதிகளில் வருவாய் துறை, சுகாதாரத் துறை, காவல்துறை ஆகியன இணைந்து கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர்

இந்நிகழ்வில் போளூர் வட்டாட்சியர் மற்றும் நகர காவல்துறை டிஎஸ்பி, வட்டார மருத்துவ அலுவலர், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மத்திய பேருந்து நிலையம் வரை சென்று கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தும் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!