நுகர்பொருள் வாணிப கிடங்கில் நுகர்பொருள் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு!
நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பான அலுவலர்
சேத்துப்பட்டு தாலுகா தச்சம்பாடி ஊராட்சியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில், உணவுப்பொருட்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன்ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள தச்சம்பாடி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில், நேற்று மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் பதிவேடுகளை ஆய்வுசெய்து, உணவுப் பொருட்கள், மழையில் சேதம் அடையாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், ஆய்வு செய்தார்.
தாலுகாவில் உள்ள அனைத்து விநியோக கடைகளுக்கும் பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் உடன் இருந்தனர்.
சேத்துப்பட்டில் நிதி சார் விழிப்புணர்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேல் வில்லிவனம் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி சேத்துப்பட்டு கிளை சார்பாக கல்வி நிதிசார் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சரக மேற்பார்வையாளர் கிருபாகரன் தலைமை தாங்கினார். நெடுங்குணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் இளங்கோவன், வங்கி அலுவலர்கள் வெங்கடேசன் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வங்கி சாரா மேற்பார்வையாளர் கிருபாகரன் பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிராமப்புற மக்களுக்கு சிறு வணிக கடன் ,மகளிர் தொழில் முனைவோர் கடன் ,மாற்றுத்திறனாளிகள் கடன், ஆதரவற்ற விதவை மற்றும் கைம் பெண்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு வாழ்வாதாரத்திற்கு வழங்கும் கடன், மகளிர் சுய உதவி குழு கடன் , குறைந்த வட்டிக்கு நகை கடன், பொதுமக்கள் டெபாசிட் செய்யும் பணத்திற்கு மற்ற வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி என வழங்கி சிறப்பாக சேவை செய்து வருகிறது.
மேலும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கிராமப்புற வளர்ச்சிக்கு வங்கி செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் கிராமத்தில் புதியதாக 10 சிறு சேமிப்பு கணக்குகளை தொடங்கி மூன்று சிறு வணிக கடன், இரண்டு மகளிர் தொழில் முனைவோர் கடன் வழங்க விண்ணப்பங்கள் வழங்கினார் . கூட்டத்தில் கிராம பொதுமக்கள் விவசாயிகள் மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu