திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டம்

திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கூட்டம்
X

போளூர் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி மன்றத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 100 % செயலாக்கம் குறித்தும், நெகிழியை தவிா்த்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி மன்றத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஜ்வான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாந்தி நடராஜன், பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழத்தர் முகமது இஷாத் வரவேற்றார்.

பேரூராட்சி மன்ற தலைவர் ராணி சண்முகம் கலந்து கொண்டு பேசும்போது, ''வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போளூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

போளூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் சண்முகம் பேசும்போது, நெகிழி ஒழிப்பை நடைமுறைப்படுத்த மஞ்சப் பையை அரசு அறிமுகம் செய்தது.அதை வியாபாரிகள் கடைப்பிடித்து வருகின்றனா். நுகவோா்கள் வெறும் கையுடன் வந்து பொருள்களை கேட்கின்றனா். இதனால், சில வியாபாரிகள் வியாபாரம் பாதிக்கக்கூடாது என நெகிழிக் கவா்களில் பொருள்களைக் கொடுக்கின்றனா். இதைத் தடுக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இதைத் தொடா்ந்து செயல் அலுவலா் முஹமத் ரிஸ்வான் பேசுகையில், தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் உள்ளன. இதில் போளூா், சூலூா், கோத்தகிரி, தரங்கம்பாடி, போடிநாயக்கனூா், வல்லம் என 6 பேரூராட்சிகள் சிறந்த பேரூராட்சிகளாக தோந்தெடுக்கப்பட்டன. போளூா் பேரூராட்சியில் வருகிற ஜூலை 3-ஆம் தேதி 10 பேரூராட்சியில் உள்ள அதிகாரிகளுக்கு தூய்மை நகரமாக எப்படி பராமரிப்பது என்பது குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே, பேரூராட்சியில் உள்ள வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து நெகிழி தவிா்ப்பை முழுமையாக கடைப்பிடிக்கவேண்டும். நெகிழி பறிமுதல், அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், தன்னாா்வ தொண்டு நிறுவன நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

போளூரில் கலைஞரின் சிலை அமைக்க முடிவு.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலை அமைப்பதற்கான இடத்தினை திமுக மருத்துவர் அணி துணை தலைவர் கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஈரா ஸ்ரீதரன், நகர மன்ற தலைவர் கார்த்திக் வேல்மாறன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போளூர் காவல் நிலையம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போளூர் டிஎஸ்பி கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே போதை பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு