மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ்  ஆர்ப்பாட்டம்..!
X

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராஜா பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் அருணகிரி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் வினோத்குமார், மாநிலத் துணைத் தலைவர் அன்பு தாஸ், மாவட்ட தலைவர் முருகன், வட்டார தலைவர்கள் இளங்கோவன், சோலை முருகன், பழனி, நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.

போளூர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரியின் அறிவுறுத்தலின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்காத மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து போளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி வாயிலில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முனிரத்தினம் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை உரை நிகழ்த்தினார் .

மேலும் ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் யுவராஜ், வட்டார தலைவர்கள், மாவட்ட விவசாய அணி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா