சேத்துப்பட்டில் 2 மாணவர்கள் இடையே மோதல்

சேத்துப்பட்டில் 2 மாணவர்கள் இடையே மோதல்
X

மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கி கொண்டு சண்டை போட்டுக் கொண்டனர்.

சேத்துப்பட்டில் 2 மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

திருவண்ணாமலை மவாட்டம் சேத்துப்பட்டு-வந்தவாசி சாலையில் பழம்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை 1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கி கொண்டு சண்டை போட்டுக் கொண்டனர். இதை, அங்கிருந்த மாணவர் ஒருவா் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் சண்டை போட்டுக் கொண்ட 2 மாணவர்கள், அவர்களின் பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினார். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது, என எச்சரித்து 2 மாணவர்களின் பெற்றோரிடமும் எழுதி வாங்கி கொண்டு மாணவர்களை அனுப்பி வைத்தார். மாணவர்களிடையே நடக்கும் மோதல் சம்பவங்கள் குறித்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி