போளூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு

போளூர் பெரிய ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு
X

போளூர் பெரிய ஏரியை ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ்.

போளூர் பெரிய ஏரியை, திருவண்ணாமலை ஆட்சித்தலைவர் முருகேஷ் ஆய்வு நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு பெரிய ஏரிகளில், போளூர் பெரிய ஏரியும் ஒன்று. இதன் பரப்பளவு சுமார் 487 ஏக்கர் ஆகும். இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு, 138.45 மில்லியன் கன அடி ஆகும். இந்த ஏரியின் மூலம் ஆயிரத்து 110 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஏரியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போளூர் பெரிய ஏரியை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், ஆரணி கோட்டை உதவி செயற்பொறியாளர் வடிவேல், போளூர் கோட்ட உதவி பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர் சண்முகம், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture