போளூர் அருகே வாக்குச்சாவடியில் ஆட்சியர் ஆய்வு

போளூர் அருகே வாக்குச்சாவடியில் ஆட்சியர் ஆய்வு
X

வாகன சோதனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்.

போளூர் அருகே அதிக வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

போளூர் அருகே குருவிமலை கிராமத்தில் அதிக பெண் வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் தேர்தல் தொடர்பான ஆய்வு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது போளூர் வட்டம் குருவிமலை கிராமத்தில் அதிகப் பெண் வாக்காளர்கள் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அடிப்படை வசதிகளான மின்சார வசதி, குடிநீர் வசதி ,கழிவறை வசதி, மாற்று திறனாளிகள் சாய்வு தளம், போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு மாவட்ட முழுவதும் உள்ள பள்ளிகளை இதுபோன்று தூய்மையாகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வைக்குமாறு அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து போளூர் வட்டம் அரியாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் மாதிரி வாக்குச்சாவடியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப் பட்ட சாய்வு தளம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, மேலும் வாக்குச்சாவடி மைய அலுவலர் முதல் தலைமுறை வாக்காளர்களை வாக்களிக்க வீடுகள் தோறும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் போளூர் ஆரணி செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டு வாகனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

தொடர்ந்து போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற பொது தேர்தல் தொடர்பான தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ள பயிற்சி மையம் மற்றும் வாக்குச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஆரணி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் வெங்கடேசன், தேர்தல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!