சேத்துப்பட்டு வட்டத்தில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
நியாய விலை கடையில் ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி கிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், கரைபூண்டி ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகளையும் , மனந்தல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 50 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம், 3.60. லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிட புனரமைப்பு பணி தேசிய மத்திய உணவு திட்டத்தில் சமையல் அறையில் தயாரிக்கப்படும் உணவு தரம் ஆகியவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பெரணம்பாக்கம் கிராமத்தில் கனிமவள நிதி மூலம் சீரமைக்கப்படும் பள்ளி கட்டிடம் ஆய்வு செய்தார்.. நியாய விலைக் கடையை பார்வையிட்டு அங்கு இருந்த பொதுமக்களிடம் விநியோக திட்டம் குறித்து கேட்டறிந்தார்.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் காலனி முதல் இடுகாடு வரை கட்டப்பட்டுள்ள இரு பக்க கால்வாய் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
கரைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மத்திய உணவின் தரம் குறித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அதை ருசிபார்த்து ஆட்சியர் ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.
மேலும் கொம்மனந்தல் கிராமத்தில் பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர் பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டுமெனவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
பெரணம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சுக் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப் சிங் , பயிற்சி ஆட்சியர் ஸ்ருதி ராணி , செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் அருண் , உதவி செயற்பொறியாளர் கோவிந்தன் , போளூர் தாசில்தார் சண்முகம் , சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் , மாவட்ட ஊராட்சி செயலாளர் அறவாழி , உதவி இயக்குனர் சுரேஷ்குமார் , ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் , ஒன்றிய ஆணையாளர்கள் சத்தியமூர்த்தி , வேணுகோபால் , ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரணம்பாக்கம் முருகன் , நரசிங்கபுரம் சுகன்யா , அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu