அவனியாபுரம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பவித்ர உற்சவம்

சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அவனியாபுரம் சிம்ம மலை மீது வீற்றிருக்கும் சிம்ம முகத்துடன் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பவித்ர உற்சவ விழா சதுர் வேத பாராயண திவ்ய பிரபந்தத்துடன் பவித்ர உற்சவ விழா துவங்கியது. இதில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை வெண்பட்டு குடையுடன் சாமரம் வீசப்பட்டு மாடவீதி வழியாக மேளதாளம் முழங்க வீதி உலா வந்து லட்சுமி நரசிம்மருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் உடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கார ரூபத்தில் அமர்த்தப்பட்டு யாகசாலை அமைக்கப்பட்டு பவித்ர உற்சவம் முகுந்தன் பட்டாச்சாரியார், வரதராஜன் பட்டாச்சாரியார் தலைமையில் சதுர்வேத பாராயண திவ்ய பிரபந்தத்துடன் மந்திரங்கள் ஓதி சிறப்பு யாகம் செய்து பவித்ர உற்சவம் தொடங்கியது.
இவ்விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சனம் உதவி ஆணையர் ஜீவானந்தம் ஆய்வாளர் நடராஜன் செயல் அலுவலர் சரண்யா, சேத்துப்பட்டு வந்தவாசி ஆரணி செய்யாறு காஞ்சிபுரம் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விழா குழுவினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த பவித்ர உற்சவம் விழா இன்று செவ்வாய்க்கிழமை பூர்ணஹூதியுடன் நிறைவு பெறுகிறது.
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்பது நியதி. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது. அதில் சோமவார பிரதோஷம் எனப்படும் திங்கட் கிழமையில் வரும் பிரதோஷம் பிரசித்தி பெற்றது.
திருவண்ணாமலையில், புகழ்பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், சோமவார பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வாயுலிங்கம், வருண லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. சோமவார மஹா பிரதோஷ காலத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, வந்தவாசி, ஆரணி, போளூா், செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சோமவார பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu