சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு
சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் குடோன்களில் நிரம்பி வழியும் நெல் மூட்டைகள்
சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் உள்ள 6 குடோன்களில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்துள்ளது. எனவே வரும் 28ம் தேதி வரை மூட்டைகளை கொண்டுவர வேண்டாம் என கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி நெல் கொள்முதல் செய்வதில் மாநிலத்தில் இரண்டாவது இடத்திலும் மாவட்டத்தில் முதல் இடத்திலும் திகழ்ந்து வருகிறது. இங்கு விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைப்பதால் பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு,ஆற்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் விலைப் பொருட்களுக்கு உடனுக்குடன் கணினி முறையில் பதிவேற்றம் செய்து வங்கிகள் மூலம் பணம் செலுத்தப்படுவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்நிலையில் தற்போது கார் பருவம் ஆர்.என்.ஆர்.நெல் வரத்து அதிகமாக உள்ளது, குறைந்தபட்சமாக ரூபாய் 1459 க்கும் அதிகபட்சமாக ரூ 2121, க்கும் , கோ 51 நெல் குறைந்தபட்சம் ரூ.1100 க்கும் அதிகபட்சம் ரூ.1650 க்கும் விலை போகிறது.
மார்க்கெட் கமிட்டியில் தினமும் விவசாயிகளின் நெல் மூட்டைகள் 5000 முதல் 6000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் உள்ள 6 நெல் குடோன்களில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் குவிந்துள்ளது தற்போது இந்த நெல் மூட்டைகள் எடை போடாமலும் விலை போடாமலும் உள்ளது
இன்று மட்டும் 142 விவசாயிகளின் 4500 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படப்பட்டுள்ளது.
வந்தவாசியில் 135விவசாயிகளின் 4000நெல் மூட்டைகளும்போளூர் 174 விவசாயிகளின் 6500நெல் மூட்டைகளும் 125 விவசாயிகள் 3800நெல் மூட்டைகளும் செய்யார் 155 விவசாயிகள் 4000 நெல் மூட்டைகள் தேசூர் 76 விவசாயி 1900 நெல் மூட்டைகள்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் குடோன்கள் நிரம்பி வழிவதால் வரும் 28ஆம் தேதி வரை விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் தினேஷ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu