போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது

போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது
X

பைல் படம்.

சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போளூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

போளூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர். இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை சொல்லி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் திருமணத்துக்கு மறுத்ததுடன் மாணவியை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவி கடந்த மாதம் 30-ந் தேதி திருவண்ணாமலை குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் போளூர் அனைத்து மகளிர் காவல்துறைக்கு அறிவுறுத்தினர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்