திருவண்ணாமலை: பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

திருவண்ணாமலை: பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
X

அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் தேவிகாபுரம் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சரவணன் தலைமை வகித்தார் . சிறப்பு அழைப்பாளராக சமூக நலத்துறை சார்பில் கருத்தாளர் பாலையா கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்குள் திருமணம் செய்வதை தடுத்தல், மாணவிகள் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் கண்டறிந்து அவர்கள் மீது புகார் தெரிவிக்க வேண்டும்.

பள்ளிக்கு பேருந்தில் வரும் போதும், வீட்டுக்கு செல்லும்போதும் யாராவது பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்தால் உடனடியாக பெற்றோர், ஆசிரியர், காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். பாலியல் தொந்தரவு குறித்து புகார்களை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சாண்டி, ஆசிரியர்கள் ,மற்றும் மாணவிகள் ,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future