சாதனை படைத்த 28 அரசு பள்ளிகளுக்கு விருது
சாதனை படைத்த 28 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி விருது வழங்கி எழுதுபொருள்கள், புத்தக பை வழங்கினார்.
போளூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த 74 அரசு பள்ளிகளில் படிக்கும் 355 ஏழை மாணவ-மாணவிகளுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள், புத்தகப் பை போன்றவை வழங்கும் நிகழ்ச்சி போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.வி.சேகரன் முன்னிலை வகித்தார்.போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் வரவேற்றார். போளூர் கல்வி மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 23 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 12-ம் வசிப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 5 அரசு மேல்நிலைப்பள்ளிகள் என சாதனை படைத்த 28 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி விருது வழங்கி பாராட்டினார். மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருள்கள், புத்தக பை மற்றும் பள்ளிகளுக்கு யு.பி.எஸ். ஆகியவற்றை அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கினர். முடிவில் பள்ளி தலைமைஆசிரியர் ஜோதி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu