படவேட்டில் ஆடி வெள்ளி விழா: சுங்கவரி ஏலம் திடீர் நிறுத்தம்

படவேட்டில் ஆடி வெள்ளி விழா: சுங்கவரி ஏலம் திடீர் நிறுத்தம்
X

படவேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற ஏல  கூட்டம்.

படவேட்டில் ஆடிவெள்ளி விழாவையொட்டி கடைகள, வாகன சுங்கவரிக்கான ஏலம் பொதுமக்கள் எதிர்ப்பால் திடீரென நிறுத்தப்பட்டது.

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வருகிற 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 29-ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ஆடி வெள்ளி விழா நடக்க உள்ளது. இந்த விழாவுக்கு வரும் வாகனங்கள் சுங்க வரி, கசாப்பு தொட்டி கோழி, கசாப்பு கடை நடத்தி கொள்ளுதல் உள்பட பல்வேறு இனங்களுக்கான சுங்க வரி வசூல் செய்யும் உரிமை ஏலம் நேற்று படவேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஏலம் நடத்த ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் படவேடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர். ஆனால் இந்த ஏலம் நடத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தெரிவித்தார். மேலும் மீண்டும் ஏலம் நடைபெறுமா? என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business