போளூர் அருகே வக்கீலை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

போளூர் அருகே வக்கீலை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
X
போளூர் அருகே வக்கீலை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 61), வழக்கறிஞர். . இவர், ரெண்டேரிப்பட்டு கூட்ரோடு பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளை சாலையின் குறுக்கே நிறுத்தி இருந்தனர். இதனால் அருண்குமார் 'ஹாரன்' அடித்துள்ளார். அப்போது அவா்கள் 'கொஞ்ச நேரம் நிற்க முடியாதா' என்று ஆபாசமாக பேசி அருண்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் காயம் அடைந்தார்.

அப்போது அங்கு வந்தவர்கள், 2 பேரையும் மடக்கி பிடித்து போளூர் போலீசில் ஒப்படைத்தனர். காயம் அடைந்த அருண்குமாரை சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூரை சேர்ந்த டிரைவர் கஜேந்திரன் என்ற மருதுபாண்டி (30), சென்னை தண்டலத்தை சேர்ந்த குமார் மகன் தினகரன் (21) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான தினகரன் சென்னை சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி