போளூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
போளூரில் நடந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
போளூரில் வருவாய்த்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை போளூர் போலீஸ் டி.எஸ்.பி. கோவிந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போளூர் தாசில்தார் சஜேஷ் பாபு, சமூகநலத்துறை தாசில்தார் செந்தில்குமார் துணைத் தாசில்தார் தெய்வநாயகி, தட்சிணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கலையரசன், கிராம நிர்வாக அலுவலர்கள், மலைமாறன், மீனா மயிலரசன், காவல்துறை உதவி ஆய்வாளர் அய்யப்பன், போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏழுமலை ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணி போளூர் பஜார் வீதி சிந்தாரப்பேட்டை அண்ணா சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தன. பேரணியில் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 80 பேர் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியா்கள் சங்க பேரவைக் கூட்டம்
போளூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் 6-ஆவது வட்டக் கிளை பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டத் தலைவா் அபிபுல்லாகான் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி சிறப்புரையாற்றி சங்கக் கொடியேற்றினாா். வட்ட துணைத் தலைவா் அழகிரி வரவேற்றாா்.
கூட்டத்தில் போளூரில் உள்ள போளூரான் கால்வாய் தூா்வாரக் கோருதல், கஸ்தம்பாடி ஊராட்சியில் புதிய அரசு விவசாயக் கல்லூரி அமைக்கக் கோருதல், குறைபட்ச ஓய்வூதியத் தொகை ரூ.7850 ஐ அரசு வழங்குதல், குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய உறுப்பினா் சோக்கை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டச் செயலா் செழியன் ஆண்டறிக்கை வாசித்தாா். மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் ஜெகநாதன் ஆகியோா் பேசினா். வட்டப் பொருளாளா் ராமலிங்கம், ஓய்வு பெற்ற வட்டாட்சியா் அண்ணாமலை, சேத்துப்பட்டு வட்டத் தலைவா் குழந்தைவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வட்ட துணைத் தலைவா் பாலு நன்றி கூறினாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu