மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு
பொதுமக்களுக்கு மஞ்சப்பயினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயிர தீர்வைத் துறை சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் மாணவர்கள், பொதுமக்களுக்கு போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பற்றிய பிரசுரங்களை வழங்கி பேசியதாவது;
போதை பொருள் நம்முடைய அன்றாட வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும், பொதுவாக வயது வந்த மகன் என்பது 13 வயது முதல் தொடங்குகிறது. பெரும்பாலும் குற்றப்பிரிவில் 70 முதல் 80 சதவீதம் பேர் பருவ வயது சார்ந்தவர்களே.
அவர்கள் சாதிக்க வேண்டும் என்று எண்ணி குற்ற பிரிவில் சிக்கிக் கொள்கின்றனர். போதை பழக்கத்திற்கு அடிமையாவதன் மூலம் திருட்டுப் போன்ற குற்றத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படுகிறது. இதனால் அவர்களது கல்வி பாதிக்கப்படுகிறது. மற்றவர்களால் புறக்கணிக்கப்படுகின்றனர் .மேலும் போதை பொருள் மூலம் உளவியல் உடல் மற்றும் மரபு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது .உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல ஆரோக்கியமான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் புகை பிடிப்பதனால் புற்றுநோய் ஏற்படுகிறது.
புகைப்பிடிப்பவருக்கு மட்டுமல்லாமல் அதன் அருகில் இருப்பவர்களும் அதை சுவாசிப்பதன் மூலம் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மாணவர்கள் பொது மக்களாகிய நீங்கள் போதை பொருளிலிருந்து விலகி தப்பித்துக் கொள்ளுங்கள். மேலும் கடைகளில் வியாபாரம் செய்தால் உங்கள் நண்பர்கள் போதை பழக்கத்தில் அடிமையாகி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திலோ காவல்துறையினரிடத்திலோ தகவல் தெரிவியுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில், அதை நன்றாக பார்த்துக் கொள்ளவும். மாவட்ட நிர்வாகம் உங்களுக்காக இருக்கின்றது. எனவே அதனை உணர்ந்து கல்வியை கற்று மென்மேலும் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.
மஞ்சப்பை விழிப்புணர்வு
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை மூலம் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் மஞ்ச பையனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அலுவலர் குமரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள் ,ஆசிரியர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu