திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக பொதுக்கூட்டங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக பொதுக்கூட்டங்கள்
X

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா அதிமுக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணா அவர்களின் 116வது பிறந்த நாள் விழா அதிமுக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தெள்ளாா் கிழக்கு ஒன்றியச் செயலா் பச்சையப்பன் தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் மணி, ஜெ.பேரவை மாவட்டச் செயலா் பாஸ்கா், தெள்ளாா் மேற்கு ஒன்றியச் செயலா் தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ஜாகிா்உசேன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

செங்கம்

செங்கத்தில் அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் தலைமை வகித்தாா்.

மாநில மகளிரணி துணைச் செயலா் அமுதா, ஒன்றியச் செயலா்கள் அருணாச்சலம் (செங்கம் கிழக்கு), அசோக் (ஜமுனாமரத்தூா்), காா்த்திகேயன் (தண்டராம்பட்டு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் ஆனந்தன் வரவேற்றாா்.

கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா்கள் அதிவீரராமபாண்டியன், பேராவூரணி திலீபன் ஆகியோா் கலந்துகொண்டு முன்னாள் முதல்வா் அண்ணாவின் சாதனைகள் குறித்து பேசினா். தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைக் கழக பேச்சாளர் ஜமீலா, வடபழனி ராமகிருஷ்ணன், பேராவூரணி திலீபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

போளூர்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்...

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் நம்பேடு ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா லட்சுமி காந்தன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் போளூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தலைமை கழக பேச்சாளர் கோபி, மணி வாசகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணன், அரங்கநாதன், சுரேஷ்குமார், வீரபாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், நகர செயலாளர் செல்வம், ஒன்றிய மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கிளை, வார்டு மற்றும் வட்ட கழக செயலாளர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!