/* */

கலெக்டர் அலுவலகம் முன் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கலெக்டர் அலுவலகம் முன் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
X

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா ஆத்துவாம்பாடி பகுதியை சேர்நதவர் ராஜநிலா. கூலி தொழிலாளி. இவர் இன்று தனது மனைவி பத்மா , மகள் வளர்மதி ஆகியோருடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக போர்டிகோவின் முன்பு திடீரென அவர்கள் மறைத்து கொண்டு வந்திருந்த தலா அரை லிட்டர் பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான மற்றொரு தரப்பிற்கும், இவர்களுக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. எதிர்தரப்பினர் ராஜநிலாவின் வீட்டை சேதப்படுத்தியதாகவும், அவர்கள் மீது சந்தவாசல் போலீசில் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காததால் எதிர்தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் மேல் விசாரணைக்காக கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

Updated On: 9 Sep 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.