போளூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்

போளூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு மேலாளர் கவிதா , எய்ட்ஸ்  பற்றிய விழிப்புணர்வு  உரையாற்றினார்

போளூர் கலைஞர் திருமண மண்டபத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் கலைநிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கிராம சமுதாய நல்வாழ்வு சங்க நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேலாளர் கவிதா, உதவி மேலாளர் சிவக்குமார், போளூர் அரசு தலைமை மருத்துவர் அருண்குமார், மருத்துவர்கள் , கிராம சமுதாய நல்வாழ்வு சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு மேலாளர் கவிதா பேசும்போது, எய்ட்ஸ் நோயாளியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் அதனைப் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

பின்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா