கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து அதிமுகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து அதிமுகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்
X

பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கிய சேவூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் ஜெயசுதா

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அதிமுக சார்பில் திமுக ஆட்சியில் நடந்து வரும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் வக்கீல் சங்கர், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பாரிபாபு, நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் பெருமாள், மாவட்ட பொருளாளர் அரையாளம் வேலு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெய்சங்கரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர். கவுன்சிலர் கணேசன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திமுக ஆட்சியில் நடந்து வரும் கள்ளச்சாராய உயிரிழப்புகள், போதை பொருள் கடத்தல், கஞ்சா விற்பனை அதிகரிப்பு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வியாபாரிகள், பொதுமக்களிடம் விநியோகம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து போளூர், ஆரணி டவுன் பகுதியில் திருவண்ணாமலை மத்திய மாவட்டம் அதிமுக சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் கஞ்சா போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடுவதை கண்டித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா ஆகியோர் போளூர் டவுன் பேருந்து நிலையம் அருகிலும் ஆரணி டவுன் காந்தி ரோடு பகுதியிலும் ஆரணி தொகுதி இரும்பேடு ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வழங்கினார்கள்.

இதில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைசெயலாளர் செல்வம், ஜெ.பேரவை ஒன்றிய இணை செயலாளர் கணேஷ், ஒன்றிய செயலாளர் விமல்ராஜ், திருமால், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் தணிகைவேல், முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் புங்கம்பாடி சுரேஷ், மாவட்ட பிரதிநிதி சகாயம், முன்னாள் செயலாளர் சீனிவாசன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!