போளூர் ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

போளூர் ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு
X

உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டும் பணியை ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர் 

போளூர் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியர் பார்வையிட்டுஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் ஆட்சியர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதூர் ஒன்றியம் திருச்சூர் ஊராட்சியில் ரூபாய் 2 லட்சத்தில் நூலகம் பழுது பார்ப்பது, திருச்சூர் ஊராட்சி ஒன்றியம் மேல் படியும் பட்டு கிராமத்தில் ரூபாய் ஐந்து லட்சத்தில் பக்க கால்வாய் அமைக்கும் பணி , சோமந்தபுதூர் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சத்தில் வீடு தோறும் குழாய் அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

போளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை கூடுதல் ஆட்சியர் பிரதாப் ஆய்வு செய்தார் .

இந்த ஆய்வின்போது பயிற்சி ஆட்சியர் ரவிதேஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!