போளூர் அருகே அணை கட்டும் பணி கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

போளூர் அருகே அணை கட்டும் பணி கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
X

பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குனர்.

போளூர் அருகே ஆற்றின் குறுக்கே ரூ. 14 கோடியில் அணை கட்டும் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்ஷேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போளூரை அடுத்த வம்பலூர் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே ரூ.14 கோடி மதிப்பீட்டில் அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை நேற்று மாலை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப்சக்ஷேனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்ஷேனா பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அவருடன் முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர் சேப்பாக்கம் ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் மணி மோகன், மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம் ஆகியோர் வந்தனர்.

சாத்தனூர் அணை

இதேபோல் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணையில் உள்ள மதகு ஷட்டர்கள் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

நிறைவு பெற்ற இந்தப் பணிகளை நேற்று நீர்வளத் துறை கூடுதல் அரசு செயலாளர் சந்தீப்சக்ஷேனா குழுவினருடன் நேரில் ஆய்வு செய்தார்.

கூடுதல் அரசு செயலாளரிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் சாத்தனூர் அணையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் 53 கூலி தொழிலாளர்கள் தங்களை நிரந்தரமான கூலி தொழிலாளர்களாக ஆக்குவதற்கு மனு அளித்தனர். பெற்றுக் கொண்ட நீர்வளத் துறை கூடுதல் அரசு செயலாளர் உங்களுடைய கோரிக்கையை முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஊரக வளா்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கொத்தந்தவாடி கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. மங்கலம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்படுகிறது.

இந்தப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநா் அருண்மணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து, சானானந்தல் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் நாற்றங்கால் மையத்தில் மரக்கன்றுகள் வளா்க்கப்படுவதை அவா் பாா்வையிட்டாா். ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா்கள் சரண்யாதேவி (வளா்ச்சி), கருணாநிதி (தணிக்கை), ஆணையாளா் லட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) கிருஷ்ணமூா்த்தி, உதவிப் பொறியாளா் அருணா, ஊராட்சித் தலைவா் புவனேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி பதிவேடுகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகள் குறித்து கூடுதல் இயக்குநா் குமாா் ஆய்வு செய்தாா்.

ஊராட்சித் தலைவா் முருகன், உதவிப் பொறியாளா் கோவா்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி, ஒன்றிய உதவிப் பொறியாளா் மாதவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மதிவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.

இராந்தம் ஊராட்சி இராந்தம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணிகளின் பதிவேடு, ரூ.43 லட்சத்தில் நடைபெறும் ஊராட்சி அலுவலக கட்டடப் பணி, ரூ.12 லட்சத்தில் திறந்தவெளிக் கிணறு அமைக்கும் பணி, பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணி, தனிநபா் விவசாய திறந்தவெளிக் கிணறு அமைக்கும் பணி ஆகியவற்றை மாநில கண்காணிப்புப் பொறியாளா் சரவணக்குமாா் ஆய்வு செய்தாா்.

உதவி இயக்குநா் அசோகன், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநா் அருண், வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன், உதவிப் பொறியாளா் ஜெயந்தி, ஊராட்சித் தலைவா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!