பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: ஆர்டிஓ அறிவுறுத்தல்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: ஆர்டிஓ அறிவுறுத்தல்
X

போளூர் பகுதி தேர்தல்  பார்வையாளரான ஆரணி ஆர்டிஓ கவிதா, பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

போளூர் பேரூராட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஆர்டிஓ அறிவுறுத்தினார்

போளூர் பேரூராட்சி மன்ற பதவிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் போளூர் பகுதி பார்வையாளரான ஆரணி ஆர்டிஓ கவிதா, பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது தேர்தல் பணிகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டார். அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். இதுவரை வேட்புமனு பெற்றவர்களின் பட்டியலை பார்வையிட்டார்.

பின்னர் கூறுகையில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது எந்த காரணத்தைக் கொண்டும் கூட்டம் சேரக்கூடாது. வேட்பாளருடன் ஒருவர் மட்டும் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். அங்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலரும் பேரூராட்சி செயல் அலுவலருமான முகமது, வட்டாட்சியர் சண்முகம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai marketing future