இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: சேத்துப்பட்டு வந்தவாசி சாலை பாதை சீரமைப்பு

இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: சேத்துப்பட்டு வந்தவாசி சாலை பாதை சீரமைப்பு
X

சேத்துப்பட்டு வந்தவாசி சாலை பாதை சீரமைப்பு

மழையினால் சேதமடைந்த சேத்துப்பட்டு வந்தவாசி சாலை சீரமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி

சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக பள்ளம் தோண்டி கேபிள் ஒயர் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பணிகளை முடித்த பின்பு அந்தப் பள்ளங்களை சரியாக மண் போட்டு மூடாமல்சென்றுவிட்டனர். தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சாலை முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனை நமது இன்ஸ்டாநியூஸ் தளத்தில் செய்தியாக வெளியிட்டு ஊராட்சி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலை சரிசெய்யப்பட்டது. அதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு