விவசாயிகள் விலைப் பொருட்களுக்கு சுங்க வரி ரத்து
சேத்துப்பட்டு சிறப்புநிலை பேரூராட்சி மன்றக் கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு சுங்க வரி ரத்து செய்து பேரூராட்சி தலைவா் சுதா முருகன் தீா்மானம் நிறைவேற்றினாா்.
சேத்துப்பட்டு சிறப்புநிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் சுதா முருகன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலா் ஆனந்தன், துணைத் தலைவா் திலகவதி செல்வராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் தமிழகத்தில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொள்முதல் செய்வதில் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி முதலிடத்தில் திகழ்ந்து வருகிறது. விவசாயிகள் கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, மேல்மலையனூர் அவலூர்பேட்டை என பல்வேறு பகுதிகளில் இருந்து நல்ல விலை கிடைப்பதால் இங்கு விற்பனை செய்து வந்தனர்.
சேத்துப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் காலம் காலமாக சுங்கவரி வசூல் செய்து வந்தது. 20 ஆண்டு காலமாக விவசாயிகள் விவசாய சங்கங்கள் சுங்க வரியை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து தங்களுடைய கோரிக்கையை பேரூராட்சி நிர்வாகத்தில் வைத்து வந்தனர்.
இந்த நிலையில், சேத்துப்பட்டு பேரூராட்சியில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் பேரூராட்சி தலைவா் சுதா முருகன், விவசாயிகள் நலன் கருதி விவசாய விளை பொருள்களுக்கு சுங்கவரி ரத்து செய்து தீா்மானம் நிறைவேற்றினாா். வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இத்தீா்மானம் செயல்பாட்டிற்கு வரும் சுங்கவரி வசூலிக்கப்பட மாட்டாது.
இதற்கான விளம்பரப் பதாகை சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் நான்கு முனைச் சந்திப்பு பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும் .
மேலும் பஜார் வீதியில் சிறு வியாபாரிகள் நடைபாதை கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். அது மட்டும் இல்லாமல் வர்த்தக ரீதியாக வரும் வாகனங்களுக்கு எப்போதும் சுங்கவரி வசூலிக்கப்படும் என தெரிவித்தார் .
மேலும் சேத்துப்பட்டு பேரூராட்சி அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . கூட்டத்தில் அனைத்தும் என்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu