திருவண்ணாமலை மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடங்கியது

போளூர் பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஆரணி ஆர்டிஓ நேரில் ஆய்வு செய்து வருகிறார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள வாக்குச்சாவடிகளில் பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு அதிகப்படுத்த பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையிருப்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் நடைபெற்றுவரும் வாக்கு பதிவினை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் முன்னிலையில் மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
போளூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 17 சதவீத ஓட்டு பதிவானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu